ரூ.5 கோடியை ஏமாற்றியதாக நடிகர் விமல் மீது போலீஸில் புகார்

ரூ.5 கோடியை ஏமாற்றியதாக நடிகர் விமல் மீது போலீஸில் புகார்

அரசு ஃபிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நடத்திவரும் கோபி காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விமல் மீது புகார் அளித்துள்ளார்.
Published on

அரசு ஃபிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நடத்திவரும் கோபி என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விமல் மீது புகார் அளித்துள்ளார். 

அவரது புகார் மனுவில், மன்னர் வகையறா படத்துக்காக தன்னிடமிருந்து ரூ.5 கோடியை நடிகர் விமல் கடனாக பெற்றார். அதற்காக இருவரும் ஒப்பந்தமும் போட்டுக்கொண்டோம். 

மன்னர் வகையறா படம் வெளியாகி நல்ல லாபம் பெற்றபோதிலும் தன்னிடம் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றினார். கடந்த சில மாதங்களுக்கு முன் 1.30 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தி, மீதமுள்ள  தொகையை 6 மாதத்தில் தருவதாக உறுதியளித்தார். 

பின்னர் பொய்யான காரணங்களக் கூறி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் என் மீது புகார் அளித்தார். அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ரூ. 3 கோடி தருவதாக கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஒப்புக்கொண்டார். பணம் குறித்து அவரிடம் கேட்டபோது கொலை மிரட்டல் விடுக்கிறார்'' என அவர் தன் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com