
நடிகை காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், குழந்தையின் பெயரை அவரது கணவர் அறிவித்துள்ளார்.
நடிகை காஜல் அகவர்வாலுக்கு நேற்று (ஏப்ரல் 19) ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து அவரது கணவர் கௌதம் கிச்சுலு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தைக்கு 'நீல் கிச்சுலு' எனப் பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
அவரது பதிவில் 'எங்கள் மகனான நீல் கிச்சுலுவின் பிறந்துள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். காஜல் அகர்வாலின் தங்கையும் நடிகையுமான நிஷா, ''நேற்று காலை மிகவும் சிறப்பானதாக இருந்தது. எங்கள் உலகை இன்னும் அழகாக்கும் விலைமிதிப்பற்ற சிறிய உயிரை வரவேற்றோம்.
இதையும் படிக்க | 'பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்'' - பாக்யராஜ் காட்டம்
அவனது அழகான சிரிப்பு, மின்னுகின்ற கண்கள் ஆகியவை எங்கள் உலகத்தை ஒளிரச் செய்தன. அவனின் சிறிய அழகான பாதம், கைகள், சிறப்பான நகங்கள் ஆகியவை அழகு'' என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
காஜல் அகர்வாலுக்கும் கௌதம் என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. கர்ப்பமாக இருந்த காஜல் அகர்வால் அவ்வப்போது தனது அனுபவங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...