'பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்'' - பாக்யராஜ் காட்டம்

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என இயக்குநர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார். 
'பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்'' - பாக்யராஜ் காட்டம்

பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என இயக்குநர் பாக்யராஜ்  கடுமையாக சாடியுள்ளார். 

இசையமைப்பாளர் இளையராஜா அம்பேத்கரும் மோடியும் என்ற நூலுக்கு முன்னுரை எழுதியிருந்தார். அதில் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்கள் அம்பேத்கரின் சிந்தனையையொட்டி இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்தப் பிரச்னை அடங்கும் முன் பிரதமர் மோடி குறித்து இயக்குநர் பாக்யராஜ் பேசியுள்ளார். புத்தக வெளியிட்டு விழாவில் பேசிய இயக்குநர் பாக்யராஜ், ''பிரதமர் மோடியை குறை சொல்கிறவர்களை எனக்கு பிடிக்கும். அவரைப் பற்றி குறை சொல்கிறவர்கள் பொதுவாக சொல்வது, மோடி அடிக்கடி வெளிநாடு செல்கிறார் என்பது தான். அடிக்கடி வெளிநாடு செல்வதற்கு யார் உடம்பில் பலம் இருக்கிறது ? வெளிநாடு சென்றுவந்தவர்கள் இரண்டு, மூன்று நாட்கள் ஓய்வு எடுப்பார்கள். 

ஆனால் பிரதமர் மோடி வெளிநாடு சென்றுவந்ததும் கோயம்புத்தூரில் ஒரு நிகழ்ச்சி என்றால் உடனடியாக வந்துவிடுவார். அவர் ஓய்வின்றி உழைக்கிறார். அவரது உடம்பை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்கிறார். எந்த பிரதமரால் அவரைப் போல சுறுசுறுப்பாக செயல்பட முடியும். இந்தியாவுக்கு இப்படி ஒரு சக்திமிக்கவர் வேண்டும்.

பிரதமர் பதவியிலிருக்கும்போது இக்கட்டான சூழ்நிலைகள் வரும். இப்படி பேசினால் ஒருவருக்கு பிடிக்காது, அல்லது மற்றொருவருக்கு சாதகமாக இருக்கும். விமர்சனம் செய்கிறவர்கள் எப்பொழுதும் இருந்துகொண்டே இருப்பார்கள். பிரதமர் மோடி விமர்சனங்களுக்கு செவி சாய்க்காமல் இருந்து வருகிறார். 

விமர்சனம் செய்பவர்களை குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று நினைத்துக்கொள்ள சொல்வேன். தாய் வயிற்றிலிருக்கும் சிசுவுக்கு 4வது மாதம்தான் காது உருவாகும், 5வது மாதம் வாய் உருவாகும். விமர்சனம் செய்கிறவர்களை 3 மாசத்தில் பிறந்தவர்கள் என்று ஏன் சொல்கிறேன் என்றால், நல்லதை இவனும் பேச மாட்டான். பிறர் சொன்னாலும் காது கொடுத்து கேட்க மாட்டான். விமர்சனம் செய்பவர்களை பிரதமர் இப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com