ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

நடிகர் சல்மான்கான் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி 

நடிகர் சல்மான் கான் துப்பாக்கி வைத்துக்கொள்ள மும்பை காவல்துறை அனுமதி அளித்துள்ளது. 

News image
Updated On :1 ஆகஸ்ட் 2022, 6:12 am

DIN

நடிகர் சல்மான் கான் துப்பாக்கி வைத்துக்கொள்ள மும்பை காவல்துறை அனுமதி அளித்துள்ளது. 

கடந்த ஜூன் மாதம் சல்மான் கானுக்கும் அவரது தந்தைக்கும் கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. அதில், சித்து மூஸேவாலாவுக்கு ஏற்பட்ட கதியை நீங்களும் சந்திப்பீர்கள் என குறிப்பிடப்பட்டு இருந்தது. உடனே இதுதொடர்பாக பாந்திரா காவல் நிலையத்தில் சல்மான் கான் புகார் அளித்தார். 

இதையடுத்து சல்மான் கானுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அத்துடன் தெற்கு மும்பை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அண்மையில் சென்ற சல்மான்கான் தற்காப்பிற்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் கோரி விண்ணப்பித்திருந்தார். 

இந்த நிலையில் நடிகர் சல்மான் கான் துப்பாக்கி வைத்துக்கொள்ள மும்பை காவல்துறை அனுமதி அளித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.