நகைச்சுவையாக இருக்கிறது - தேசிய விருதுகள் குறித்து பிரபல இயக்குநர் விமர்சனம்

நகைச்சுவையாக இருக்கிறது - தேசிய விருதுகள் குறித்து பிரபல இயக்குநர் விமர்சனம்

தற்போதைு அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் தனக்கு நகைச்சுவையாக இருப்பதாக அடூர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Published on

தற்போது அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் தனக்கு நகைச்சுவையாக இருப்பதாக அடூர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  

ஜான் ஆப்ரஹாம் நினைவு விருது வழங்கும் விழாவில் பழம்பெரும் இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார். 

இதுகுறித்து அவர் பேசியதாவது, ''சினிமாவை கலை வடிவமாக பார்க்கவேண்டும். தேசிய விருதுகளைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இருப்பவர்கள் ஹிந்தி பட ரசிகர்களாக இருக்கிறார்கள். எனது நண்பர் ஒருவர் சொன்னார், விருதைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இருப்பவர்கள் 2 படங்களைப் பார்ப்பதற்கே சலிப்படைகிறார்களாம். அவர்களுக்கு சினிமா குறித்த அடிப்படை அறிவு இருப்பதில்லை. 

தேசிய விருது இப்பொழுது மோசமான நகைச்சுவையாக மாறியிருக்கிறது. விருதுக்கு தேர்ந்தெடுக்கும் படங்களுக்கு என்ன அளவுகோல் என்று தெரியவில்லை. தேர்வுக்குழு உறுப்பினர்கள் ஹிந்தி பட ரசிகர்களாக இருக்கிறார்கள். ஒரு காலத்தில் நாட்டின் புகழ்பெற்ற இயக்குநர்கள், விமர்சகர்கள் நடுவர்களாக இருந்தார்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தமிழில் சூரரைப் போற்று படத்துக்காக சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை, சிறந்த படம் என 5 விருதுகள் கிடைத்தன. 

மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் படம் சிறந்த இயக்குநர், சிறந்த துணை நடிகர், பாடகி, சண்டை இயக்கம் ஆகிய பிரிவுகளில் 4 விருதுகளை அள்ளியது. 

தன்ஹாஜி படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூர்யாவுடன் இணைந்து அஜய் தேவ்கன் பெற்றார். அஜய் தேவ்கனுக்கு விருது அளிக்கப்பட்டது விமர்சனங்களை சந்தித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com