லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிக்க பிரபல இயக்குநர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்திற்கான வேலைகளில் மும்முரமாகியுள்ளார். இதற்கான கதை விவாதத்தில் தனது நண்பரும், சக திரைக்கதை எழுத்தாளருமான ரத்ன குமாருடன் கதை விவாதத்திலும் ஈடுபட்டார். அந்த புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வைரலாகின.
மாஸ்டர், விக்ரம், ஆகிய படங்களிலும் ரத்ன குமார் திரைக்கதை எழுதினார். அந்த திரைப்படங்கள் பெரும் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, தற்போது தளபதி 67 திரைப்படத்திலும் திரைக்கதையாசிரியராக ரத்ன குமார் பணியாற்றுகிறார்.
மேலும், தளபதி 67 படத்தின் அப்டேட்டுகளை அடுத்தடுத்து இயக்குநர் வெளியிட வேண்டும் என ரசிகர்கள் ட்விட்டரில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அவர்களுக்கு ஏதுவாக தற்போது தளபதி 67 படத்தின் வில்லன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
லேகேஷ் படங்களில் வில்லன்களுக்கு பலமான திரைக்கதையும் பின்னணியும் அமைக்கப்படுவது வழக்கமாக உள்ளது. அந்தவகையில் தளபதி 67 படத்தின் வில்லன் குறித்த தகவல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிக்க திரைப்பட இயக்குநர் கெளதம் வாசுதேவ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே இவர், செல்ஃபி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ருத்ர தாண்டவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தொழில்நுட்பத்தின் அடிப்படை செமிகண்டக்டர் : எஸ். கிருஷ்ணன்

தொழில் செ(ய்)ய விரும்பு

குட்டி குடித்தல் குழுந்தலாயி அம்மன் வரலாறு

பழமொழி நானூற்றில் கருத்து வெளிப்பாடு
வீடியோக்கள்

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

