வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தொழில்நுட்பத்தின் அடிப்படை செமிகண்டக்டர் : எஸ். கிருஷ்ணன்

கல்விச் சிந்தனை அரங்கில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் எஸ். கிருஷ்ணன் பேசியது குறித்து..

News image

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் எஸ். கிருஷ்ணன்

Updated On :2 மார்ச் 2026, 12:47 pm

தொழில்நுட்பத்திற்கான அடிப்படை செமிகண்டக்டர் என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் எஸ். கிருஷ்ணன் தெரிவித்தார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் இரு நாள்கள் (மார்ச் 2, 3) நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு 2026-ல் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் எஸ். கிருஷ்ணன் கலந்துகொண்டார்.

இதில், மாற்றத்திற்கான தொழில்நுட்பம் : இந்தியாவின் செமிகண்டக்டர் புரட்சி என்ற தலைப்பில் எஸ். கிருஷ்ணன் பேசியதாவது:

''மின்னணு பொருள்களில் எந்தவித மாற்றங்கள் ஏற்பட்டாலும் செமிகண்டக்டர் மிகவும் முக்கியமானது. கரோனா காலகட்டத்தில் ஹுண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் கார்களை தயாரித்தாலும் செமிகண்டக்டர் இல்லாததால், அவற்றை இயக்க முடியவில்லை. ஆலைகளில் இருந்து வாகனங்கள் வெளியே வராததற்கு செமிகண்டக்டர் முக்கிய காரணம்.

நாட்டில் பல பெரிய நிறுவனங்கள் செமிகண்டக்டர் வடிவமைப்பை மேம்படுத்த ஆய்வு மையங்களைக் கொண்டுள்ளன. செமிகண்டக்டர் உற்பத்தி வளர்ச்சியை நோக்கிய முன்னேற்றப் பாதையில் இருக்கிறது'' எனக் குறிப்பிட்டார்.

Summary

ThinkEdu conclave 2026 Semi conductors are foundational aspect of technology S Krishnan Secretary of the Ministry of Electronics

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.