47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

'ஆர்ஆர்ஆர்' படத்துக்கு ஆஸ்கர் கிடைக்க 99 சதவிகித வாய்ப்பு - பிரபல இயக்குநர் கணிப்பு

ராஜமெளிலியின் ஆர்ஆர்ஆர் படத்துக்கு ஆஸ்கர் கிடைக்க 99 சதவிகித வாய்ப்பு உள்ளதாக பிரபல இயக்குநர் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :7 அக்டோபர் 2022, 4:17 am

DIN

ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்துக்கு ஆஸ்கர் கிடைக்க 99 சதவிகித வாய்ப்பு உள்ளதாக பிரபல இயக்குநர் தெரிவித்துள்ளார். 

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ஆர்ஆர்ஆர் திரைப்படம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் அமெரிக்காவை சேர்ந்த திரையுலக பிரபலங்கள், விமர்சகர்கள் ஆர்ஆர்ஆர் படத்துக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தனர். 

Story image

இந்த நிலையில் இயக்குநர் அனுராக் காஷ்யப் ஆர்ஆர்ஆர் படத்துக்கு ஆஸ்கர் கிடைக்க அதிக வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார். தனது டோபரா பட நிகழ்வில் பேசிய அனுராக், ''ஹாலிவுட்டில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியா சார்பில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டால், அந்தப் படம் ஆஸ்கர் வெல்ல 99 சதவிகித வாய்ப்பிருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் தெலுங்கு திரைப்பட ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.