பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வெளியானது விக்ரமின் 'கோப்ரா' பட கால அளவு, சென்சார் விவரம்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் கால அளவு மற்றும் சென்சார் விவரங்கள் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 11:43 am

DIN

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் கால அளவு மற்றும் சென்சார் விவரங்கள் வெளியாகியுள்ளது. 

டிமாண்டிக் காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து அடுத்ததாக இயக்கயிருக்கும் படம் கோப்ரா. விக்ரம் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். 

மேலும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், கனிகா, மிருணாளினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் 7 வித்தியாசமான தோற்றங்களில் நடித்துள்ளார். 

கோப்ரா திரைப்படம் வருகிற 31 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் சார்பாக வெளியிடுகிறார். 

கோப்ராவுக்கு தணிக்கைத்துறை யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளதாம். அதன் படி இந்தப் படம் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் கோப்ரா படம் 2 மணி நேரம் 55 நிமிடங்கள் ஓடக் கூடியது. கிட்டத்தட்ட 3 மணி நேர படமாக கோப்ரா உருவாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.