

லோகேஷ் கனகராஜ் குறித்து கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரூ.400 கோடி அளவிற்கு பெரும் வசூல் சாதனையைப் படைத்தது.
ஓடிடியில் வெளியானாலும் தமிழைத் தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கமல்ஹாசன், “விக்ரம் திரைப்படத்திற்கு முன் வேறு கதையில் நடிக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால், அப்போது இருந்த சூழலில் ஒரு தயாரிப்பாளாராக நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. லோகேஷிடம் உங்கள் கதையை மேலோட்டமாக சொல்லுங்கள் என்றேன். அவர் விக்ரம் படத்தின் யோசனையை சொன்னார். அது திரைக்கதை அல்ல. ஒரு ஐடியாதான். அந்த ஐடியா எனக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. தன் பாணியில் புதிய யோசனையால் வெற்றி பெற்றார். இதனால் தான் லோகேஷ் கனகராஜ்-யை பிடிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.