இன்றுமுதல் அக்.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்றும் நாளையும் வரிவசூல் மையம் செயல்படும்: மாநகராட்சி அறிவிப்புதனியாா் பால் விலை மீண்டும் உயா்வு: ஆவின், தனியாா் லிட்டருக்கு ரூ.30 வரை விலை வித்தியாசம் ஆகம குழுவால் கண்டறியப்பட்ட கோயில்கள்: கருத்து கேட்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு 18 - 28 வயதுப் பிரிவில் 3.27 கோடி புதிய வாக்காளா்கள் சோ்ப்பு: தோ்தல் ஆணையம்

இயக்குநராகிறாரா நடிகர் சிவகார்த்திகேயன்? கிரிக்கெட் வீரர் நடராஜன் பேட்டி

தனது வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் அத்திரைப்படத்தை இயக்க வாய்ப்புள்ளதாக பிரபல கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். 

Published On :

தனது வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் அத்திரைப்படத்தை இயக்க வாய்ப்புள்ளதாக பிரபல கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக தகவல் வெளியானது. 

இந்நிலையில் சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கிரிக்கெட் வீரர் நடராஜன், “எனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். மேலும் அவர்தான்  அந்தப் படத்தை இயக்குவார் என நினைக்கிறேன்” எனத் தெரிவித்தார். 

ஐபிஎல் 2022 போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய நடராஜன் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 ஆட்டத்தில் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டத்தின்மூலம் பிரபலமடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.