ஜப்பானில் நடிகர் ரஜினிகாந்த் செய்த வசூல் சாதனையை ஆர்ஆர்ஆர் திரைப்படம் முறியடித்துள்ளது.
இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் அல்லுரி சீதா ராமராஜூ (ராம் சரண்), கொமரம் பீம்(ஜூனியர் என்டிஆர்) என்கிற இரு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை முன்வைத்து உருவாக்கப்பட்ட ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வெளியாகி பெரிய வெற்றியைப் பதிவு செய்ததுடன் உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் அதிகமான வசூலை அடைந்துள்ளது.
இப்படத்தில் அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, ஒலிவியா மாரிஸ், ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.
இதையும் படிக்க: 10 கோடி பார்வைகளைக் கடந்தது ‘பத்தல பத்தல’ பாடல்
இந்நிலையில், ஜப்பானில் வெளியான இப்படம் இதுவரை ரூ.24 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவாக இந்த வசூல் சாதனை படைத்த முதல் இந்தியப் படம் இதுதான். மேலும், ஜப்பானில் கடந்த 1998 ஆம் ஆண்டு வெளியான ரஜினியின் ’முத்து’ திரைப்படமே வசூலில் இதுவரை முதலிடத்தில் இருந்துவந்தது. தற்போது, ரஜினியின் சாதனையையும் ஆர்ஆர்ஆர் முறியடித்துள்ளது.
ராஜமௌலி அடுத்து பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு வைத்து இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


