
மைக்கேல் மதன காம ராஜன் படத்தில் பீம் பாய் வேடத்தில் நடித்தவர் பிரவீன் குமார் சோப்டி. இந்தப் படத்தில் அவரது வேடம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
மேலும் மகாபாரதம் தொடரில் இவர் பீம் வேடத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று(திங்கள் கிழமை) இரவு 10.30 மணிக்கு மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 74. இவர் ஆசிய விளையாட்டு போட்டிகளில் விளையாடிய இவர் வட்டு எறிதல் போட்டியில் கலந்துகொண்டு 4 முறை பதக்கங்களை வென்றுள்ளார்.
இதில் இரண்டு தங்கப் பதக்கங்களும் அடங்கும். காமன்வெல்த் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். பிரவீன் குமாருக்கு ஒரு மகள் உள்ளார். அவரது மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.