பாடல்கள் எழுதி கிடைக்கும் ஊதியத்தை நா.முத்துக்குமார் குடும்பத்துக்கு அளிக்கும் சிவகார்த்திகேயன்: ரசிகர்கள் நெகிழ்ச்சி
தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியராக விளங்கியவர் நா.முத்துகுமார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் அதிக பாடல்களை எழுதியவர் என்ற சாதனையைப் பெற்றவர்.
பாடலாசிரியராக உச்சத்தில் இருந்தபோதே உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவரது மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது வரிகளை ரசிகர்கள் தங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து அவரைக் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிக்க | விக்ரமா ? துருவா ? வெல்வது யார் ? 'மகான்' - திரை விமர்சனம்
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன்தான் எழுதும் பாடல்களுக்கான ஊதியத்தை நா.முத்துகுமாரின் குடும்பத்துக்கு வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் பாடலை நா.முத்துகுமார் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோலமாவு கோகிலா படத்தில் கல்யாண வயசு பாடலை முதன்முதலாக சிவகார்த்திகேயன் எழுதினார். பின்னர் டாக்டர் படத்தின் அனைத்து பாடல்களையும் சிவகார்த்திகேயன் எழுதினார். தற்போது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், நடிகர் விஜய்யின் பீஸ்ட் ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் பாடல் எழுதியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

