
ஹாலிவுட் அளவில் ஸ்பைடர் மேன், சூப்பர் மேன், பேட் மேன் என பல சூப்பர் ஹீரோ படங்கள் இருக்கின்றன. இந்திய அளவில் சூப்பர் ஹீரோ படங்கள் முயற்சிக்கப்பட்டாலும் அவை சின்னத்திரை தொடரான சக்திமான் அளவுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
சின்னத்திரை தொடராக வெளிவந்த சக்திமான் அப்போதைய குழந்தைகளிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தொடரில் யாருக்காவது ஆபத்து என்றால் மின்னல் போல சுழன்று வந்து அனைவரையும் காப்பாற்றுவார். சக்திமான் உண்மையான மனிதர் என்றே பல குழந்தைகளும் நினைத்தனர். அந்தத் தொடர் தற்போது திரைப்படமாகிறது.
இதையும் படிக்க | ஆலியா பட்டின் அசத்தல் நடனம்: வைரலாகும் ‘தோலிடா’ பாடல்
மூன்று பாகங்களாக இந்தப் படம் உருவாகிறது. இந்திய அளவில் பிரபல நடிகர் ஒருவர் சக்திமானாக நடிக்கிறார். பிரபல இயக்குநர் இயக்குவார். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவிருக்கிறது.
இதனையடுத்து ரசிகர்கள் சக்தி மானாக அக்சய் குமார், சல்மான் கான் உள்ளிட்ட நடிகர்களின் பெயர்களைப் பரிந்துரைத்து வருகின்றனர். இந்திய அளவில் பிரபலமான நடிகர் என்று குறிப்பிட்டிருப்பதால் தென்னிந்திய நடிகர் ஒருவர் நடிக்கவே அதிகம் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
காரணம் தென்னிந்திய படங்கள் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. உதாரணமாக பாகுபலி, கேஜிஎஃப், புஷ்பா போன்ற படங்கள் இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் வெளியாகி வெற்றிபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.