தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பாரதி கண்ணம்மா பாரதியுடன், பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை... இதுதான் காரணமா?

பாரதி கண்ணம்மா பாரதியுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

News image
Updated On :16 பிப்ரவரி 2022, 12:37 pm

DIN

கரோனா பரவல் உச்சத்திலிருந்தபோது சின்னத்திரை தொடர்கள் படப்பிடிப்பு நடத்த முடியாமல் பாதியில் நிறுத்தப்பட்டன. பின்னர் கரோனா பரவல் கட்டுக்குள் வந்ததும் மீண்டும் படப்பிடிப்பு துவங்கி புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின. 

அப்போது மீண்டும் மக்களை புதிய தொடர்களைப் பார்க்க வைப்பதற்கு ஒரு யுத்தியைக் கையாண்டன. அதாவது இரண்டு தொடர்களும் இணைத்து சங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பினர். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்களை ரசிகர்கள் தொடர்ந்து பார்க்கவும் அது உதவியது. மேலும் புதிதாகவும் பார்வையாளர்கள் கிடைத்தனர்.

இந்த நிலையில் தற்போது பாரதி கண்ணம்மாவில் பாரதியாக நடிக்கும் அருண் பிரகாஷ் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லையாக நடிக்கும் காவ்யா ஆகிய இருவரும் எடுத்துக்கொண்ட செல்ஃபி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மூர்த்தி மற்றும் தனத்தின் மகனை பாரதி கையில் வைத்திருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. இதனையடுத்து மீண்டும் இரண்டு தொடர்களும் இணையப்போகிறதா அல்லது பாரதி மட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார் என்று கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.