நடிகர் விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரிக்கிறார்.
இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிப்பதற்கு கீர்த்தி சுரேஷ் ஒரு காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் தில் ராஜுவிற்கு நடிகர் விஜய் நடிக்கும் படத்தை தயாரிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்திருக்கிறது.
இதனையடுத்து தில் ராஜு, நடிகை கீர்த்தி சுரேஷ் மூலம் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய கேட்டிருக்கிறார். இதனயைடுத்து விஜய் தரப்பில் கீர்த்தி சுரேஷ் பேச, அதன் பிறகு இருவரது சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. நடிகர் விஜய்யுடன் பைரவா, சர்கார் ஆகிய இரண்டு படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.