வைரலாகும் தனுஷின் சமீபத்திய புகைப்படம்
தனுஷ் சமீபத்தில் உணவகத்தில் அமர்ந்து சாப்பிடும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தை 1980 மிலிட்டரி ஹோட்டல் என்ற உணவகம் பகிர்ந்து, எங்கள் உணவகத்துக்கு சிறப்பு விருந்தினர் வந்தார். எங்களது சுவை மிகுந்த உணவை சிறந்த நடிகரான தனுஷிற்கு அளிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் பிரபல தெலுங்கு இயக்குநர் சுதீர் வர்மா எங்களது உணவு உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நான் நம்புகிறேன் சார் என்று தெரிவித்துள்ளார். தனுஷுடன் ஒரு இளம் பெண் அமர்ந்து சாப்பிடுகிறார். அவர் யார் என்பது குறித்து தகவல் இல்லை.
இதையும் படிக்க | முடிவுக்கு வந்தது பிரச்னை: சந்தித்துக்கொண்ட இளையராஜா - கங்கை அமரன்
தனுஷ் தற்போது வாத்தி, நானே வருவேன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் நானே வருவேன் திரைப்படம் சமீபத்தில் ஊட்டியில் படமாக்கப்பட்டுவருகிறது.
இந்த நிலையில் நடிகர் தனுஷ் தனது மகன் யாத்ராவுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். ஐஸ்வர்யாவுடனான பிரிவுக்கு பிறகு தனுஷ் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

