
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் - துருவ் இணைந்து நடித்த மகான் திரைப்படம் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. கலவையான விமர்சனங்களை இந்தப் படம் பெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்தப் படம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு கார்த்திக் சுப்புராஜ் பேட்டியளித்தார். அதில், ''உங்களை மாதிரி ஒரு கொள்கை வெறிபிடித்தவன்தான் காந்தியை கொன்றது என்ற வசனத்தை படத்தில் வைத்திருந்தேன். அந்த இடத்தில் கோட்சேவைத்தான் குறிப்பிட்டேன்.
அந்த வசனத்தை மாற்ற சொன்னார்கள். காந்தியைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளுங்கள். ஆனால் கோட்சேவைப் பற்றி பேசாதீர்கள் என்றார்கள். கொள்கை தீவிரவாதியாக வந்தவன் காந்தியைக் கொன்றான் என நாம் சொல்வதை வேண்டாம் என்றார்கள்'' என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தை சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்தப் படத்தில் பாபி சிம்ஹா, சிம்ரன், சனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அந்த விடியோவை மூடர் கூடம் பட இயக்குநர் நவீன் பகிர்ந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.