ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார்.

News image
Updated On :26 பிப்ரவரி 2022, 10:46 am

DIN

கன்னட உலகின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் இளைய மகன் புனித் ராஜ்குமார். கடந்த அக்டோபர் மாதம் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவருக்கு 46 வயதே ஆவதால் ரசிகர்களால் அவரது இழப்பை தாங்கிக் கொள்ள முடியவில்லை. 

இதனையடுத்து அவரது மறைவுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். கடந்த சில வாரங்களுக்கு பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தார்.

இந்த நிலையில் நடிகர் விஜய் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். மலர் தூவியும் தீபாராதனை காட்டியும் நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 
  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.