
பிகில் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ரெபா மோனிகா ஜான். தொடர்ந்து ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்தார். தற்போது விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக எஃப்ஐஆர் படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் அவர் ஜோமன் ஜோசஃப் என்பவரை காதலித்து வந்தார். இருவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. திருமண புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது. ரெபா திருமணம் குறித்து அறிவிக்காததால் பலருக்கும் இந்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.
இதையும் படிக்க | கார்த்தியின் 'கைதி' ஹிந்தி ரீமேக் - ஹீரோ யார் தெரியுமா?
இந்த நிலையில் நடிகை ரெபா மோனிகா ஜான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திருமண புகைப்படங்களை ரெபா பகிர்ந்துள்ளார். இதனையடுத்து இருவருக்கும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.