தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணியாக இருப்பவர் நடிகை அனுஷ்கா. தமிழில் ரஜனிகாந்த், அஜித், விஜய், சூர்யா என பெரும்பாலான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார். குறிப்பாக பாகுபலி திரைப்படத்தின் வெற்றி அவரை இந்திய அளவில் பிரபலமான நடிகையாக்கியது.
இந்த நிலையில் அவரது நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியான அருந்ததி திரைப்படம் மாபரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படம் தமிழில் அருந்ததி என்ற பெயரிலேயே வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.
இந்தப் படம் வெளியாகி 13 வருடங்கள் ஆனதையொட்டி நடிகை அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், ''அருந்ததி திரைப்படம் வெளியாகி 13 வருடங்களாகிறது. எல்லா நடிகைகளுக்கும் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்க கூடிய கதாப்பாத்திரம்.
நான் ஆசிர்வதிக்கப்பட்டவள். கோடி ராம கிருஷ்ணா மற்றும் ஷியாம் பிரசாத் ரெட்டி உட்பட படக்குழுவினருக்கு நன்றி. இந்தப் படத்தை ஆதரித்த ரசிகர்களுக்கு நன்றி. அருந்ததி என் மனதுக்கு நெருக்கமான படமாக இருக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பஞ்சாப் விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப ராகவ் தவறிவிட்டாா்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

பிஞ்சுக் கைவண்ணம்
முதல் தேர்தலும் சுகுமார் சென்னும்...
ஏழு தலைமுறை சுற்றம்...
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


