
புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகாராஜ் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 83.
முன்னதாக பிர்ஜுவிற்கு மத்திய அரசு இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் வழங்கி கௌரவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தில் வரும் உன்னை காணாத என்ற கதக் நடனப் பாடலை பிர்ஜு தான் வடிவமைத்திருந்தார். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் பிர்ஜு மகாராஜ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | பிக்பாஸ் நிகழ்ச்சியில் ராஜுவிற்கு கிடைத்த பணம் இவ்வளவா ? வெளியான தகவல்
அவரது பதிவில், ''ஈடு இணையற்ற நடனக கலைஞரான பண்டிட் பிர்ஜு மகாராஜ் மறைந்தார். ஓர் ஏகலைவனைப் போல பல்லாண்டுகள் தொலைவிலிருந்து அவதானித்தும், விஸ்வரூபம் படத்திற்காக அருகிருந்தும் நான் கற்றுக்கொண்டவை ஏராளம். இசைக்கும், நாட்டியத்திற்கும் தன் ஆயுளை அர்ப்பணித்துக்கொண்டவரே, உன்னை காணாது நான் இன்று நானில்லையே'' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈடு இணையற்ற நடனக் கலைஞரான பண்டிட் பிர்ஜூ மகராஜ் மறைந்தார்.ஓர் ஏகலைவனைப் போல பல்லாண்டுகள் தொலைவிலிருந்து அவதானித்தும்,விஸ்வரூபம் படத்திற்காக அருகிருந்தும் நான் கற்றுக்கொண்டவை ஏராளம்.இசைக்கும் நாட்டியத்திற்கும் தன் ஆயுளை அர்ப்பணித்துக்கொண்டவரே, ‘உன்னை காணாது நான் இன்று நானில்லையே’ pic.twitter.com/WC9bTUkjE2
— Kamal Haasan (@ikamalhaasan) January 17, 2022