

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவான ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
வஞ்சகர் உலகம் படத்தை இயக்கிய இயக்குநர் மனோஜ் பீதா இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’. இப்படம் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்.
இந்நிலையில், நடிகர் சந்தானத்தின் 43-வது பிறந்தநாளான இன்று இப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
சந்தானத்துடன் குக்வித் கோமாளி புகழ், ரியா சுமா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.