
கரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்ட ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் வெளியீட்டை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஆர்ஆர்ஆர். பாகுபலி படத்துக்கு பிறகு இயக்குநர் ராஜமௌலி இயக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
இந்தப் படத்தின் வேலைகள் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில் ஜனவரி 7 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து படத்திற்கான விளம்பர வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
ஆனால் கரோனா தொற்று பரவல் நாடு முழுவதும் அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் வெளியீடு திடீரென ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதையும் படிக்க | ’கேஜிஎஃப் 2’ உடன் மோதும் அமிர்கானின் ’லால் சிங் சத்தா
இந்நிலையில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழுவினர் வெள்ளிக்கிழமை அறிவித்தனர். அதன்படி மார்ச் 18 அல்லது ஏப்ரல் 28ஆம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படக்குழுவினரின் இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.