பாலகிருஷ்ணாவின் அகண்டா தமிழில் நாளை வெளியாகிறது: தியேட்டர் என்ன ஆகப் போகுதோ?

பாலகிருஷ்ணாவின் அகண்டா திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரையரங்குகளில் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலகிருஷ்ணாவின் அகண்டா தமிழில் நாளை வெளியாகிறது: தியேட்டர் என்ன ஆகப் போகுதோ?


பாலகிருஷ்ணாவின் அகண்டா திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரையரங்குகளில் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்துள்ள அகண்டா திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழ்நாட்டில் சமூக ஊடகங்களில் இந்தப் படத்தின் காட்சிகள் அதிகளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. 

இது ஓடிடியில் ஓடிக்கொண்டிருந்தாலும், இதைத் திரையரங்குகளிலும் வெளியிட படக் குழு திட்டமிட்டுள்ளது. தமிழ் மொழி மாற்றம் குறித்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ள சூழலில் தமிழ்நாட்டில் இந்தப் படம் தமிழிலேயே வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்தொற்று காரணமாக தமிழ்நாட்டில் இந்த வாரம் அதிகளவிலான நேரடித் தமிழ்ப் படங்கள் வெளியாகவில்லை. இதனால், தமிழ்நாடு விநியோகஸ்தர்களும் அகண்டா திரைப்படத்தை வெளியிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

எனினும், இந்தப் படம் தமிழ்நாட்டில் திரையரங்குகளில் தமிழில் வெளியாவது குறித்து படக் குழுத் தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தெளிவுபடுத்தவில்லை.

போயாபடி ஸ்ரீனு இயக்கியுள்ள இந்தப் படத்தில் பிரக்யா ஜெய்ஸ்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க நடிகர்களும் படத்தில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com