ரச்சிதாவுடன் என்ன பிரச்னை ? முதன்முறையாக மனம் திறந்த தினேஷ்

ரச்சிதாவுடன் என்ன பிரச்னை ? முதன்முறையாக மனம் திறந்த தினேஷ்

ரச்சிதாவை விவாகரத்து செய்துவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தினேஷ் விளக்கம் அளித்துள்ளார்.  
Published on

ரச்சிதாவை விவாகரத்து செய்துவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தினேஷ் விளக்கம் அளித்துள்ளார். 

கடந்த 2011 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் தொடரில் இணைந்து நடித்த தினேஷ் மற்றும் ரச்சிதா இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்துகொண்டனர். 

இருவரும் இணைந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகிளிலும் கலந்துகொண்டனர். பின்னர் சரவணன் - மீனாட்சி தொடர் மூலம் ரச்சிதா மீண்டும் நடிக்க வந்தார். இரண்டு சீசன்களாக ஒளிபரப்பான அந்தத் தொடர் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றது. 

பின்னர் ஜி தமிழில் ஒளிபரப்பான நாச்சியார் தொடரில் இருவரும் இணைந்து நடித்தனர். கரோனா காரணமாக அந்தத் தொடர் பாதியில் நின்றது.

இந்த நிலையில் கடந்த ஒரு  ஆண்டாக தினேஷ் மற்றும் ரச்சிதா இருவரும் பேசிக்கொள்வதில்லை எனவும் இருவரும் விவாகரத்து செய்யவிருக்கின்றனர் எனவும் செய்திகள் வெளியானது. ஆனால் இதுகுறித்து இருவரும் பதிலளிக்கவில்லை. 

இதன் ஒரு பகுதியாக ரச்சிதா இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக மற்றொரு செய்தியும் பரவியது. இதனையடுத்து முதன்மைறையாக தினேஷ் மனம் திறந்து பேசியுள்ளார். தினேஷ் பேசியதாவது, நாங்கள் பிரிவது குறித்து எந்த சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கவில்லை. எல்லோர் வீட்டிலும் நடப்பது போல சின்ன மனக்கசப்பு எங்களுக்குள் ஏற்பட்டது. 

அதை சரி செய்ய நேரம் எடுத்துக்கொண்டுள்ளோம். எல்லாம் சரியாகி மறுபடியும் இணைந்து வாழ்வோம் என நம்புவோம். இப்போது நடப்பதை காலத்தின் கையில் கொடுத்து இருக்கிறோம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com