ஆங்கில இயக்குநர்களுக்கு தமிழ் கலாச்சாரத்தை கற்பித்த தனுஷ் - வெளியான புகைப்படம்

இயக்குநர்கள் ருஸ்ஸோ பிரதர்ஸ் மற்றும் தனுஷ் ஆகியோர் தமிழ் முறைப்படி வணக்கம் என தெரிவிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகிறது.  
ஆங்கில இயக்குநர்களுக்கு தமிழ் கலாச்சாரத்தை கற்பித்த தனுஷ் - வெளியான புகைப்படம்
Published on
Updated on
1 min read

இயக்குநர்கள் ருஸ்ஸோ பிரதர்ஸ் மற்றும் தனுஷ் ஆகியோர் தமிழ் முறைப்படி வணக்கம் என தெரிவிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகிறது. 

அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய ருஸ்ஸோ பிரதர்ஸ் (ஆண்டனி மற்றும் ஜோ ருசோ) தற்போது தி கிரே மேன் என்ற படத்தை இயக்கியுள்ளனர். தி கிரே மேன் என்ற நாவலை தழுவி உருவாகியுள்ள இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை (ஜூலை 22) வெளியாகிறது. 

கிரிஸ் ஈவன்ஸ், ரியான் கோஸ்லிங், ஆனா தி அர்மாஸ் உள்ளிடோருடன் நடிகர் தனுஷும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் தற்போது தனுஷ் ஈடுபட்டுவருகிறார். 

இந்த நிலையில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் நடிகர் தனுஷ் வேட்டி சட்டையில் கலந்துகொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. விக்கி கௌசலுடன் தனுஷ் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. 

இந்த நிலையில் நடிகர் தனுஷ் ருசோ பிரதர்ஸ் தமிழ் முரைப்படி வணக்கம் சொல்லும் புகைப்படத்தைப் பகிர்ந்து இந்தியாவுக்கு உங்களை வரவேற்கிறேன் வணக்கம் என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com