

விக்ரம் திரைப்படத்தைப் பார்த்த ரஜினிகாந்த், கமல்ஹாசனை தொலைபேசி வாயிலாக அழைத்துப் பேசி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் விக்ரம். படம் வெளியான பிறகு, லோகேஷ் கனகராஜுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றனர். சூர்யா, அனிருத் உள்ளிட்டோரும் ரசிகர்கள் வாழ்த்துகளைப் பெற்று வருகின்றனர்.
திரைத் துறையினரும் படக் குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த வரிசையில் தற்போது ரஜினிகாந்தும் இணைந்துள்ளார். விக்ரம் திரைப்படத்தைப் பார்த்த ரஜினிகாந்த், கமல்ஹாசனை தொலைபேசியில் அழைத்து 'சூப்பர்' என வாழ்த்துகள் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அனிருத் மற்றும் இணை தயாரிப்பாளர் மகேந்திரன் உள்ளிட்டோரையும் அழைத்து ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பட வெளியீட்டுக்கு முன் ரஜினியும் கமலும் சந்தித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.