
கதாநாயகன், வில்லன், குணச்சித்திர வேடம், சிறப்புத் தோற்றம் என எந்த பாகுபாடில்லாமல் கலக்கிக்கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. தான் ஒரு தேர்ந்த நடிகராக மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.
இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரக அரசு விஜய் சேதுபதிக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் குடிமகனாக அவர் வாழலாம்.
இதையும் படிக்க | என்ன ஆட்டம்!? அரபிக் குத்து பாடலுக்கு ஷிவானியின் வேற லெவல் நடனம்
நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், மம்மூட்டி, மோகன்லால் பார்த்திபன், பிருத்விராஜ், அமலா பால், பாடகி சித்ரா, துல்கர் சல்மான் உள்ளிட்டோருக்கு இந்த கௌரவம் கிடைத்துள்ளது.
விஜய் சேதுபதி நடிக்க வருவதற்கு முன் 2 வருடங்கள் துபையில் வேலை செய்துள்ளார். அன்று துபைக்கு சாதாரண ஊழியராக சென்ற விஜய் சேதுபதிக்கு தற்போது கோல்டன் விசா மூலம் குடிமகனாக வாழும் தகுதி கிடைத்துள்ளது. இதனையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.