
பிரபல ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டிகாப்ரியோ உக்ரைனுக்கு ரூ.75 கோடி நன்கொடை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘டைட்டானிக்’ திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமான டிகாப்ரியோ தன் அபாரமான நடிப்பாற்றலால் உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
குறிப்பாக அவர் நடிப்பில் வெளியான ‘ இன்செப்சன்’ ‘தி ரெவனெண்ட்’ ‘ தி ஷட்டர் ஐலேண்ட்’ போன்ற படங்கள் ரசிகர்களிடேயே பெரும் வரவேற்பைப் பெற்றவை.
’தி ரெவனெண்ட்’ திரைப்படம் மூலம் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றார் டிகாப்ரியோ.
தற்போது, உக்ரைனில் ரஷியா தாக்குதல் நடத்தி வருவதால் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துவரும் உக்ரைனுக்கு போரைச் சமாளிக்க டிகாப்ரியோ ரூ.75 கோடி(10 மில்லியன் டாலர்) நன்கொடை வழங்கியுள்ளார்.
டிகாப்ரியோவின் பாட்டி உக்ரைனில் பிறந்தவர் என்பதால் இந்த உதவியைச் செய்ய அவர் முன் வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.