ரூ.15 கோடியை செலுத்த நடிகர் விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவு

நடிகர் விஷால் ரூ.15 கோடியை நிரந்தர வைப்பீடாக செலுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 
ரூ.15 கோடியை செலுத்த நடிகர் விஷாலுக்கு  நீதிமன்றம் உத்தரவு
Published on
Updated on
1 min read

நடிகர் விஷால் தனது 'மருது' படத்துக்காக கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனத்திடம் ரூ.21 கோடி கடன் பெற்றிருந்ததார். அவரால் அந்தத் தொகையை திருப்பி செலுத்த இயலாத காரணத்தால் லைக்கா நிறுவனத்திடம் அந்தத் தொகையை செலுத்துமாறு கோரியுள்ளார். 

விஷால் கேட்டுக்கொண்டதற்காக அவரது கடனை லைக்கா நிறுவனம் அளித்திருந்தது. இதற்காக விஷாலுடன் லைக்கா நிறுவனம் போட்டிருந்த ஒப்பந்தத்தில், கடந்த டிசம்பர் 2020 டிசம்பருக்குள் கடன் தொகையை லைக்காவிற்கு விஷால் திரும்பி செலுத்துவது என குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் விஷால் தரப்பில் பதில் அளிக்காததன் காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் விஷாலுக்கு எதிராக லைக்கா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. 

இந்த வழக்கு இன்று (பிப்ரவரி 12) விசாரணைக்கு வந்தபோது, தங்களுக்கு வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் 'வீரமே வாகை சூடும்' படத்தை ஓடிடியில் வெளியிடக் கூடாது என லைக்கா நிறுவனம் தெரிவித்திருந்தது.

இதனையடுத்து லைக்கா நிறுவனத்திடம் பெற்ற கடனுக்காக ரூ.15 கோடியை நிரந்தர வைப்பீடாக செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் பணத்தை செலுத்தியதற்கான ரசீதை 3 வாரங்களுக்குள் நடிகர் விஷால் சமர்பிக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com