தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

பிரபாஸின் 'ராதே ஷ்யாம்' படத்துக்கு முதல் நாளில் இத்தனை கோடி வசூலா ? தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

பிரபாஸின் ராதே ஷ்யாம் படத்துக்கு கிடைத்த முதல் நாள் வசூல் விவரம் குறித்து அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 

News image
Updated On :12 மார்ச் 2022, 10:01 am

பிரபாஸ் நடித்துள்ள 'ராதே ஷ்யாம்' நேற்று (பிப்ரவரி 11) திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆந்திரா மற்றும் தெலங்கானா தாண்டி இந்தப் படத்துக்கு பெரிய வரவேற்பு இல்லை என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இந்தப் படத்துக்கு முதல் நாளில் மட்டும் ரூ.79 கோடி வசூல் கிடைத்துள்ளதாம். கரோனா பரவல் தொடங்கியதிலிருந்து வெளியான படங்களில் இதுதான் அதிகம் என்று கூறப்படுகிறது. இந்தத் தகவலை தயாரிப்பு நிறுவனமான யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் பகிர்ந்துள்ளது. 

Story image

'ராதே ஷ்யாம்' படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்தப் படத்தில் பிரபாஸ் கைரேகை நிபுணராக நடித்துள்ளார். இந்தப் படத்தில் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் பிரம்மாண்டமாக இருப்பதாக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்தப் படத்தின் பாடல்களுக்கு ஜஸ்டின் பிரபாகரனும் பின்னணி இசையை தமனும் செய்துள்ளனர். ராதா கிருஷ்ண குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.  சத்யராஜ், ஜெயராம், சத்யன், ஜெகபதிபாபு உள்ளிட்டோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.