5 வருடங்களுக்குப் பிறகு மலையாளப் படத்தில் நடிக்கும் பாவனா

பாவனா மலையாளப் படங்களில் மீண்டும் நடிக்கவேண்டும் என மலையாள ரசிகர்களும் திரையுலகினரும் கோரிக்கை வைத்தார்கள்.
5 வருடங்களுக்குப் பிறகு மலையாளப் படத்தில் நடிக்கும் பாவனா
Published on
Updated on
1 min read

ஐந்து வருடங்களுக்குப் பிறகு பாவனா நடிக்கும் மலையாளப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை பாவனா. கன்னட தயாரிப்பாளர் நவீனை 2018 ஜனவரியில் திருமணம் செய்துகொண்டார். 2017-ல் கடைசியாக ஏடம் ஜுவான் என்கிற மலையாளப் படத்தில் நடித்தார். இதன்பிறகு சமீபகாலமாக கன்னடப் படங்களில் மட்டுமே  அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பாவனா மலையாளப் படங்களில் மீண்டும் நடிக்கவேண்டும் என மலையாள ரசிகர்களும் திரையுலகினரும் கோரிக்கை வைத்தார்கள். இதையடுத்து 5 வருடங்கள் கழித்து மீண்டும் மலையாளப் படத்தில் நடிக்கச் சம்மதித்துள்ளார் பாவனா.

Ntikkakkakkoru Premondarnn என்கிற மலையாளப் படத்தில் பாவனா நடிப்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாவனா, ஷரஃபுதீன் நடிக்கும் படத்தை அறிமுக இயக்குநர் அதில் அஷ்ரஃப் இயக்குகிறார். இசை - பால் மேத்யூஸ். இப்படத்தின் போஸ்டரைப் பிரபல நடிகர் மம்மூட்டி வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com