நடிகர் சங்கத் தேர்தல்: நாசர் அணி முன்னிலை

நடிகர் சங்கத் தேர்தலில் இரண்டு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், நாசர் அணி முன்னிலையில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


நடிகர் சங்கத் தேர்தலில் இரண்டு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், நாசர் அணி முன்னிலையில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில் கே. பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், நாசர் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர்.

தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் செல்லாது என அறிவித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, வாக்கு எண்ணிக்கைக்கும் தடை விதித்தார். இதைத் தொடர்ந்து, தேர்தலில் பதிவான வாக்குகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கிக் கிளையின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டன.

தேர்தல் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைக் கடந்த மாதம் விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்தனர். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் எண்ணப்படுகின்றன.

தேர்தலில் பதிவான வாக்குகளைக் காட்டிலும் கூடுதல் வாக்குகள் இருப்பதாக ஐசரி கணேஷ், பாக்யராஜ் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பில், கூடுதல் வாக்குகள் பதிவானது குறித்து விளக்கம் கேட்டும், அதைப் பொருட்படுத்தாது வாக்குகள் எண்ணத் தொடங்கப்பட்டதாக பாக்யராஜ் மற்றும் ஐசரி கணேஷ் புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், முதலிரண்டு சுற்று முடிவில் நாசர் தலைமையிலான அணி முன்னிலை வகிப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன. தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட நாசர், பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட விஷால், துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட கார்த்தி, கருணாஸ் ஆகியோர் முன்னிலை வகித்து வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com