ஏலத்துக்கு விடப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் உடை: எவ்வளவு பணம் கிடைத்தது தெரியுமா?

ஏலத்துக்கு விடப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் உடை: எவ்வளவு பணம் கிடைத்தது தெரியுமா?

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் உடை ஏலம் போனது தொடர்பான விவரம் கிடைத்துள்ளது. 
Published on

ரஹ்மான் தற்போது சிவகார்த்திகேயனின் 'அயலான்', விக்ரமின் 'கோப்ரா', மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்', கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் 'வெந்து தணிந்தது காடு', சிம்பு நடிக்கும் 'பத்து தல', பார்த்திபனின் 'இரவின் நிழல்' ஆகிய படங்கலுக்கு இசையமைக்கிறார். 

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ராஜஸ்தான் காஸ்மோ கிளப் நிறுவப்பட்டு 28 ஆண்டுகள் ஆனதையொட்டி சென்னை மியூசிக் அகாதமியில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பயன்படுத்திய உடைகள் ஏலம் விடப்பட்டன. இதில் ஏ.ஆர்.ரஹ்மான் உடுத்தியிருந்த உடை அதிகபட்சமாக ரூ. 6 லட்சத்துக்கு ஏலம் போனது. ஏலத்தில் கிடைத்த பணத்தைக் கொண்டு துணியில்லாத ஏழை மக்களுக்கு உதவிருப்பதாக கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com