தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

தனுஷ் பெயரை நீக்கி அதிர்ச்சியளித்த ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து தனுஷ் பெயரை நீக்கியுள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 2:16 pm IST

நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிவதாக தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் அறிவித்தனர். அந்த அறிவிப்பில் 'இருவரும் பிரிந்தாலும் நண்பர்களாக தொடர்வோம்' என்று குறிப்பிட்டிருந்தனர். 

அதற்கேற்ப ஐஸ்வர்யா இயக்கிய 'பயணி' பாடலைப் பகிர்ந்த நடிகர் தனுஷ், 'தோழி ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துகள்' என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு ஐஸ்வர்யாவும் 'நன்றி தனுஷ்' என பதிலளித்திருந்தார். இது இருவரும் மீண்டும் இணைவதற்கான அறிகுறி என ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

Story image

இந்த நிலையில் ஐஸ்வர்யா ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார். ஐஸ்வர்யா தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து தனுஷ் பெயரை நீக்கி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என பெயரை மாற்றியுள்ளார். ஆனால் இன்ஸ்டாகிராமில் ஐஸ்வர்யா ஆர்.ரஜினிகாந்த் என்றே இருக்கிறது. 

ஐஸ்வர்யா அடுத்ததாக ஹிந்தியில் காதல் கதை ஒன்றை இயக்கவிருக்கிறார். 'ஓ சாதி சல்' என்ற பெயருடைய இந்தப் படத்தை கிளௌட் 9 பிக்சர்ஸ் சார்பாக மீனு அரோரா தயாரிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.