தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

இதுவரை பார்த்திராத ஒரு பீஸ்ட்: இன்னும் 3 மணி நேரத்தில் வெளியீடு

விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்திலிருந்து இதுவரை வெளியிடாத புகைப்படத்தை இன்னும் 3 மணி நேரத்தில் வெளியிடப்போவதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

News image
Updated On :27 மார்ச் 2022, 5:51 am

DIN


விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்திலிருந்து இதுவரை வெளியிடாத புகைப்படத்தை இன்னும் 3 மணி நேரத்தில் வெளியிடப்போவதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படம் 5 மொழிகளில் வெளியாவதாக சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

படத்திலிருந்து ஏற்கெனவே வெளியான இரண்டு பாடல்களும் பெரிதளவில் ஹிட் அடித்துள்ளன. இசை வெளியீட்டு விழா இல்லாததால், ரசிகர்களுக்குப் புதிதாக அப்டேட் கொடுக்க வேண்டிய நிலையில் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் உள்ளது.

பீஸ்ட் படத்துடன் திரையரங்குகளில் கேஎஜிஎஃப் இரண்டாம் பாகமும் வெளியாகிறது. இதன் டிரெய்லர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வெளியாகிறது.

இந்த நிலையில், பீஸ்ட் படத்திலிருந்து இதுவரை வெளிவராத புகைப்படத்தினை இன்னும் 3 மணி நேரத்தில் வெளியிடப்போவதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.