

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது குடும்பத்தினருடன் சனிக்கிழமை சந்தித்து பேசினார்.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மானின் திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்தது. இந்த திருமண நிகழ்விற்கு பல்வேறு முக்கிய பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | நயன்தாரா, விக்னேஷ் சிவன் அடுத்த மாதம் திருமணம்?
இந்நிலையில் சனிக்கிழமை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது குடும்பத்தினர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது புதிதாக திருமணமான மணமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழையும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கினார். இந்த சந்திப்பின் போது சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.