தசாவாதாரம் 2 எப்போது?: கே.எஸ். ரவிக்குமார் விளக்கம்

தசாவாதாரம் 2 எப்போது?: கே.எஸ். ரவிக்குமார் விளக்கம்

’தசாவாதாரம் 2’  திரைப்படத்துக்கு வாய்ப்பே இல்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
Published on

’தசாவாதாரம் 2’  திரைப்படத்துக்கு வாய்ப்பே இல்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

அண்மையில் வெளியான ‘கூகுள் குட்டப்பா’ திரைப்படத்தில் முன்னணி கதாபத்திரத்தில் ஜொலித்தவருமான கே.எஸ்.ரவிக்குமார், அப்படத்தின் நாயகன் தர்ஷன் நாயகி லாஸ்லியா ஆகியோருடன் சென்னை, திருப்போரூரில் உள்ள எஸ்.எஸ்.என். கல்லூரியின் கலை நிகழ்ச்சி ஒன்றில் நேற்று காலை கலந்துகொண்டார்.

அப்போது கமலுடன் ‘தசாவதாரம்’ படத்தில் நடந்த சில அனுபவங்களை மாணவர்களுடன் அவர் பகிர்ந்துகொண்டார். “கமல் எப்போதும் கடினமான உழைப்பை நம்பக்கூடியவர். வலி இல்லாமல் வெற்றி இல்லை என்பது அவரது பாலிசி. தசாவதாரம் படத்துக்கும் அப்படித்தான் உழைத்தார்.

சில தினங்களுக்கு முன் தசாவாதாரம் ரிலீஸாகி 12 வருஷம் ஆச்சா? என்று ஆச்சரியத்துடன் 2 மணி நேரம் பேசினார். சில வருடங்களாகவே கமலையும் என்னையும் பார்த்து ‘தசாவதாரம் 2’ எப்போது என்று கேட்கிறார்கள். ஆனால் எங்கள் இருவருக்கும் எத்தனை கோடிகள் கொட்டிக்கொடுத்தாலும் தசாவதாரம் போன்ற இன்னொரு படத்தை உருவாக்கவே முடியாது.

எனவே தசாவதாரம் 2’க்கு வாய்ப்பே இல்லை. இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com