‘ரஞ்சிதமே’ பாடலின் மூலம் மனம் கவர்ந்த பாடகி மானசி!

‘ரஞ்சிதமே’ பாடலின் மூலம் மனம் கவர்ந்த பாடகி மானசி!

வாரிசு படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடலின் மூலம் பாடகி மானசி சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கிறார். 
Published on

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' என்கிற படத்தில் நடித்து வருகிறார் விஜய். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார்.இப்படத்துக்கு இசை - தமன். தமிழில் படமாக்கப்பட்டு தெலுங்கில் டப் செய்யப்பட உள்ளது. இந்த படம் 2023 பொங்கல் தினத்தன்று ரிலீஸ் ஆகவுள்ளது. 

இந்நிலையில் 'வாரிசு' படத்தில் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே' பாடலின் லிரிக்கல் விடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. நடிகர் விஜய் மற்றும் மானசியின் குரலில் இந்த பாடல் வெளியானது. வெளியான 16 மணி நேரத்தில்  1.6 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தமிழில் அன்னக்கொடி படத்தில் பாடகியாக அறிமுகவானவர் எம்.எம். மானசி.  ஆரம்பம் படத்தில் அவர் பாடிய ‘ஸ்டைலிஷ் தமிழச்சி’ பாடல், வேலையில்லா பட்டதாரி படத்தில் பாடிய ‘இறைவனாய் தந்த இறைவியே’ பாடலகள் மிகவும் பிரபலமானது. 

இந்த பாடலில் நடிகை ராஷ்மிகாவை விடவும் பாடகி மானசி இடம்பெற்ற இடங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அவரது குரலையும் தாண்டி அவரது உடையலங்காரம், எனர்ஜி என ரசிகர்களை கவர்ந்துள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர் ஹீரோயினாகவே நடிக்கலாம் என இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com