புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

”2 ஆம் பாகத்தின் வசூலைப் பொருத்து அடுத்த பாகம்..” அவதார் குறித்து ஜேம்ஸ் கேம்ரூன்

அவதார் 2 படத்தின் வசூலைப் பொருத்து அப்படத்தின் அடுத்த பாகம் குறித்து முடிவெடுக்கப்படும் என இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :10 நவம்பர் 2022, 11:04 am

DIN

அவதார் 2 படத்தின் வசூலைப் பொருத்து அப்படத்தின் அடுத்த பாகம் குறித்து முடிவெடுக்கப்படும் என இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த படம் அவதார். இரண்டு மணிநேரம் 40 நிமிடங்கள் நம்மை வேறு உலகக்கு அழைத்து சென்றிருந்தது இத்திரைப்படம். 

25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 280 கோடி அமெரிக்க டாலர்கள் வசூலை அள்ளியது. அதுவரை வேறு எந்தத் திரைப்படமும் நிகழ்த்த முடியாத வசூல் சாதனையை இத்திரைப்படம் நிகழ்த்தியது. 

கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து  இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது.  முதல் பாகத்தைப்போல மிகச் சிறப்பான காட்சி அனுபவத்துடன் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், அவதார் 2 படத்தின் வசூலைப் பொருத்துதான் அடுத்த பாகத்தை தயாரிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் 3 ஆம் பாகத்தோடு அவதார் வரிசை முடிவுக்கு வரும் என்றும் அப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.