48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

‘எங்கேயும் எப்போதும்’ பட இயக்குநரின் அடுத்த படம் அறிவிப்பு!

‘எங்கேயும் எப்போதும்’ பட இயக்குநர் சரவணின் அடுத்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியது. 

News image
Updated On :12 நவம்பர் 2022, 5:38 am

தமிழில் இயக்குநர் சரவணனின் ‘எங்கேயும் எப்போதும்’ படம் 2011இல் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. சமீபத்தில் அதன் 10 ஆண்டு முடிவடைந்தது. இவன் வேற மாதிரி, வலியவன் படம் அந்த அளவுக்கு வெற்றி பெறாததால் பின்னர் பட வாய்ப்பு குறைந்தது. பின்னர் கன்னட படத்திற்கு சென்ற இயக்குநர் தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் புதிய படம் இயக்குகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷன் கதாநாயகனாக நடிக்கிறார். மகிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்க உள்ளார். ஸ்ரீ ஆர்க் மீடியா தயாரிக்கும் இப்படத்திற்கு ‘நாடு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 

Story image

இதில் தர்ஷன் குளிரில் நடிங்கியபடி மலைப்பகுதியில் உட்கார்ந்திருகிறார். படம் இறுதி கட்ட பணியில் இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. விரைவில் படம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.