

தமிழில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் அறிமுகமான நடிகை ஜோதிகாவின் பிறந்தநாளன்று புதிய படம் குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
ஜோதிகா கடைசியாக 2021ஆம் ஆண்டு சசிகுமாருடன் நடித்த ‘உடன்பிறப்பு’ படம் வெளியானது. அவரது பிறந்தநாளன்று பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. படத்திற்கு ‘காதல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தினை ஜியோ பேபி இயக்குகிறார். இவர் இயக்கத்தில் வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் நல்ல வரவேற்பினைப் பெற்றது. இதை தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ரீமேக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது காதல் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரை வெளியிட்டு நடிகர் சூர்யா, “ மனதைக் கவரும், ஆழமான, நன்கு எழுதப்பட்ட திரைப்படம் நம்மை நோக்கி வருகிறது” என பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.