திருமண ஒளிபரப்பு உரிமையை விற்ற மற்றொரு தமிழ் நடிகை!

நடிகை ஹன்சிகா மோத்வானி தனது திருமண ஒளிபரப்பு உரிமத்தை பிரபல  ஓடிடி தளத்திற்கு விற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 
திருமண ஒளிபரப்பு உரிமையை விற்ற மற்றொரு தமிழ் நடிகை!

தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. சில வருடங்களாக தமிழில் படம் நடிக்கவில்லை.  இந்நிலையில்,  மீண்டும் புதிய தமிழ் படமொன்றில் நடிக்கிறார். அதுவும் ஏற்கனவே அவர் நடித்த சேட்டை படத்தின் இயக்குநர் ஆர். கண்ணன் இயக்கத்தில் நடிக்கிறார். 

தற்போது ஹன்சிகாவுக்கு டிசம்பர் 4ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாகவும் மும்பையை சார்ந்த தொழிலதிபருடன் திருமணம் நடைபெறுவதாகவும் அவர்களது திருமணம் ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற 450 பழமையான கோட்டை மற்றும் அரண்மனையில் ஹன்சிகா திருமணம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொள்கிறார்கள். ஹன்சிகாவின் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை பெற பிரபல ஓடிடி தளம் பேச்சு வார்த்தை நடத்தி வந்துள்ளது. இந்த நிலையில் பெரிய தொகைக்கு திருமணத்தை ஓடிடியில் ஒளிபரப்பும் உரிமையை ஹன்சிகா விற்றுவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஏற்கனவே, நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர் தங்களது திருமண ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு அளித்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com