

தனி இசைக் கலைஞராக இருந்த ஹிப்ஹாப் ஆதி பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்து தமிழ் திரையுலகிற்குள் நுழைந்தார். அதனைத் தொடர்ந்து மீசைய முருக்கு, சிவகாமியின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். ஹிப்ஹாப் ஆதி தனது 6வது படம் குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் தனது 7வது படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வேல்ஸ் இண்டர்நேஷ்னல் ஐசரி கணேஷன் தயாரிப்பில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
ஹிப்ஹாப் ஆதி அவரே இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இதில் அவர் உடற்கல்வி ஆசிரியராக நடிக்க உள்ளார்.
அவரது 6வது படம் இன்னும் வெளியாகாத நிலையில் 7வது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வடிவேலு குரலில் வெளியானது ‘அப்பத்தா’ பாடல்!
யுவன் குரலில் ‘என்னை விட்டு உயிர் போனாலும்...’ பாடல் !
சமந்தாவின் சண்டைப் பயிற்சி விடியோவை பாராட்டிய பிரபல இயக்குநர்!
ரஞ்சிதமே பாடலுக்கு ஷிவானியின் குத்தாட்டம்: வைரல் விடியோ
ஐஸ்வர்யா ராயின் ‘விடை கொடு சாமி விட்டுப் போகின்றேன்...’ பாடல் திடீரென வைரலாக காரணம் என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.