ஐஸ்வர்யா ராய் நடிப்பில் 2007இல் வெளியான 'குரு' படத்தில் இருந்து ஒரு பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் நடித்த குரு திரைப்படம் 2007இல் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றது. இசை- ஏ.ஆர்.ரஹ்மான். 'நன்னாரே நன்னாரே' என்ற பாடல் 90களில் பிறந்தவர்களுக்கு முக்கியமான பாடலாக அமைந்தது.
சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராயின் நடிப்பு நல்ல வரவேற்பினைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது சில நாள்களுக்கு முன்பு திடீரென இந்த பாடல் இன்ஸ்டாகிரம், பேஸ்புக் என சமூக வலைதளங்களில் வைரலானது. காரணம் மீம் கிரியேட்டர்ஸ்கள். யாரோ ஒருவர் பதிவிட்ட பதிவினை வைத்து இந்த பாடல் வைரலானது. அந்த பதிவில் அப்படி இருந்தது என்ன தெரியுமா?
என்னோட பக்கத்து வீட்டு அக்கா 'விடை கொடு சாமி விட்டுப் போகின்றேன்' பாடலை ஸ்டேட்டஸா வெச்சுட்டு ஓடி போயி கல்யாணம் பண்ணிட்டாங்க. ஏரியாவே மஜாவா இருக்கு.
90ஸ் கிட்ஸ்களின் பிரபலமான இந்தப் பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அனைவரும் இந்த பாடலை பதிவிட்டு நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்.