பிரியாமணியின் ‘டிஆர்.56’: இசை மற்றும் டிரைலர் வெளியானது!
பருத்திவீரன் படத்தில் முத்தழகாக ரசிகர்களைக் கவர்ந்தவர் பிரியாமணி. இந்தப் படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. பின்னர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கமர்ஷியல் படங்களில் நடித்துவந்தார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு தி ஃபேமிலி மேன் என்ற இணையத்தொடர் அவரை இந்திய அளவில் பிரபலமாக்கியது. அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான நாரப்பாவில் நடித்திருந்த அவர், தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துவரும் ஜவான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார்.
தற்போது பிரியாமணி நாயகியாக நடிக்கும் ‘டிஆர்.56’ என்ற படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டார். ப்ரவீன் ரெட்டி கதை, திரைக்கதை எழுதி தயாரித்துள்ளார். ராஜேஷ் ஆன்ந்த் லீலா இயக்கத்தில், நோபின்பால் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகுமென அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் படத்தின் இசை, டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படம் திரையரங்குகளில் உலகெங்கும் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகுமென அதிகாரபூர்வமாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Related Article
நயன்தாரா- பிருத்விராஜ் நடிக்கும் ‘கோல்டு’: ரிலீஸ் பற்றிய அதிகாரபூர்வ தகவல்!
புதுப்பொலிவுடன் திரைக்கு வருகிறது ரஜினியின் ‘பாபா’!
பவர் ரேஞ்சர் நட்சத்திரம் ஃபிராங்க் காலமானார்
இயல்பு நிலைமைக்கு திரும்பிய ராஷ்மிகா: அசத்தும் புதிய புகைப்படங்கள்!
பூங்குழலியாக அசத்தும் தர்ஷா குப்தா: வைரலாகும் புகைப்படங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.