
இயக்குநர் மணிரத்னத்தின் கனவு படைப்பான பொன்னியின் செல்வன் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளங்களில் பிரபலங்கள் பலரும் பொன்னியின் செல்வன் போல வேடமிட்டு புகைப்படங்களை பகிர்ந்துவருகின்றனர். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பொன்னியின் செல்வன் திரைப்படம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொன்னியின் செல்வனில் பூங்குழலி வேடத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்திருந்தார். அவரது நடிப்பு விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்றது.
சமீபத்தில் நடிகர் சதீஷ் ஆடை பிரச்சினையில் துவண்டிருந்த தர்ஷா குப்தா சகஜ நிலைக்கு திரும்பியுள்ளார். தற்போது பூங்குழலி தோற்றதில் அவர் பகிர்ந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பூங்குழலி pic.twitter.com/5LkzaPoFif
— Dharsha (@DharshaGupta) November 19, 2022