
ரன்வீர் சிங்கை தீபிகா படுகோன் விவாகரத்து செய்ய இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீபிகா தற்போது பிரபாஸுடன் இணைந்து பிராஜெக்ட் கே என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அமிதாப் பச்சனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில், செப்.28ஆம் நாள் இரவு தீபிகா படுகோனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் உடனடியாக மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்துள்ள தீபிகா ஹிந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இவரும் ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங்கும் 6 வருடங்கள் காதலித்து கடந்த 2018-ல் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர்.
சில மாதங்களாகவே இருவரும் இணக்கமாக இல்லை என்றும் கணவன் மனைவி உறவில் இடைவெளி அதிகமாகி உள்ளது என்றும், விவாகரத்துவரை செல்லும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டு வந்தது. மேலும் தீபிகாவின் வருமானம் ரன்வீர் சிங்கை விட அதிகம் என்கின்றனர். ஆனாலும் பிரியப் போவதை இருவர் தரப்பிலும் உறுதிப்படுத்தவில்லை.
இந்நிலையில் நேற்று இன்ஸ்டாகிராமில் ரன்வீர் சிங் பதிவிட்ட புகைப்படத்திற்கு தீபிகா படுகோன், “சாப்பிடும்படி இருக்கிறாய்” என கமெண்ட் செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.